தமிழகத்தில் உள்ள குழந்தைகள்
இந்தியாவிலேயே மிக குறைந்த அளவு குழந்தைகள் இறப்பு விகிதத்தையும், குறைந்த அளவு தொற்று பரவலையும் கொண்டுள்ள மாநிலம் ஆகும். தொடக்கப்பள்ளி சேர்க்கை எண்ணிக்கையும் இந்தியாவிலேயே மிக அதிக அளவாக உள்ளது.

சவால்
தமிழ்நாடு, இந்திய துணைக்கண்டத்தின் தென் கோடியில் உள்ளது. புதுச்சேரி யூனியன் பிரதேசம் மற்றும் தென்னிந்திய மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திர பிரதேசம் ஆகியவை இதன் எல்லைகளாக உள்ளன. பல்வேறு வரலாற்றுச் சிறப்பு மிக்க பாரம்பரிய கட்டிடங்களுக்கு தாயகமாக உள்ள இந்த மாநிலத்தில், பல்வேறு ஆன்மீக புனித தலங்கள், மலை பிரதேசங்கள் மற்றும் மூன்று உலக பாரம்பரிய சிறப்பு மிக்க இடங்கள் உள்ளன. இதுபோல் இந்தியாவில் அதிக மக்கள் தொகை கொண்ட 7வது மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. இந்த மாநிலத்தின் 48.4 சதவீத மக்கள் நகர்புறங்களில் வாழ்கின்றனர். மனிதவள மேம்பாட்டு குறியீட்டில், தமிழகம் 6வது இடத்தில் உள்ளது.
இதே போல், 906.9 கி.மீ நீளம் கொண்ட, நாட்டின் மிக நீண்ட கடற்கரையை கொண்ட மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. கடந்த 2004ல் சுனாமி தாக்கியபோது, இந்த மாநிலத்தின் மிக நீண்ட கடற்கரை பகுதிகள் அதிகம் பாதிப்படைந்தன. அதில் 7,793 பேர் உயிரிழந்தனர்.
ஏழைகளுக்கான கொள்கைகளை செயல்படுத்துவது, வறுமை நிலையில் உள்ள சமூக மக்களின் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு சமூக பாதுகாப்பு திட்டங்கள் செயல்படுத்துவதில் முன்னோடி மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. அதோடு இந்த மாநில அரசு, முற்போக்கான சட்டங்கள் மற்றும் திட்டங்களான, சமூக பாதுகாப்பு நடவடிக்கைகள், சுகாதார மேம்பாடு, ஊட்டச்சத்து, வாஷ் மற்றும் கல்வி முறைகள் மற்றும் பொது விநியோக முறை போன்ற திட்டங்களை அறிமுகப்படுத்தியது.
இந்த சமூக கொள்கைகள், பல ஆண்டு காலமாக, சமூக துறையிலான அதிக அரசு முதலீட்டுடன் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதாடு, வலுவான நிர்வாக கட்டமைப்பு மூலம் திட்டங்கள் சிறப்பாக, கண்காணிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டுவருகின்றன. இது குழந்தைகளின் நல்வாழ்வில், உடல்நலம், ஊட்டச்சத்து மற்றும் கல்வி ஆகியவற்றில் சிறந்த தாக்கத்தை ஏற்படுத்தியது. இதனால், நாட்டில், 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளிடையே வளர்ச்சி குறைவு, மற்றும் பச்சிளம் குழந்தைகள் இறப்பு ஆகியவை மிக குறைவாகவும், பள்ளிகளில் சேர்க்கை விகிதம் மிக அதிகமாகவும் உள்ளது
குழந்தைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னெடுத்துச் செல்லுதல்
தமிழகத்தில், குழந்தைகளுக்கான நலன்களை மேம்படுத்துவது மற்றும் பல விதத்தில் ஏற்படும் இழப்புகளை குறைப்பதிலும் கடந்த பல ஆண்டுகளாக கணிசமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்துக்கான யூனிசெப் மாநில அலுவலகத்தின் திட்ட முயற்சிகள், குழந்தைகள் நலனை மேம்படுத்துவதற்காக சமூக பங்களிப்பு மற்றும் ஒருங்கிணைந்த சமூக கொள்கை அணுகுமுறை மூலம் சமூக சூழலை வலுப்படுத்திவதற்கான முயற்சிகளில் பெரிய அளவில் கவனம் செலுத்தி வருகிறது.
‘நடுத்தர வருவாய் உள்ள நாடுகள்’ தொடர்பான சமூக கொள்கை உத்திகளை வகுப்பதில் ஏற்கெனவே உள்ள அரசு அமைப்புகள் மற்றும் அது தொடர்பான துறைகள், மாநில குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் மற்றும் கிராமப்புற, நகர்ப்புறங்களில் உள்ள உள்ளூர் தற்சார்பு அமைப்புகளை மேம்படுத்துவதில் யூனிசெப் மாநில அலுலகம் ஒருங்கிணைந்து செயல்படுகிறது.
குழந்தைகளுக்கான அரசு நிதி, பரவலாக்கம் மற்றும் குழந்தைகளுக்கு ஏற்ற உள்ளூர் நிர்வாகம், பாதிக்கப்படக்கூடிய சாத்தியம் உள்ள குடும்பங்கள் மற்றும் குழந்தைகளின் சமூக பாதுகாப்பு ஆகிய சமூக கொள்கை பணிகளின் மூன்று தூண்களை மையமாக கொண்டு அவற்றின் தீர்வுகளுக்காக யூனிசெப் செயல்படுகிறது. குழந்தைகள் வாழ்க்கை, குழந்தைகள் மேம்பாடு, குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் குழந்தைகள் பங்களிப்பு ஆகியவற்றிற்காக துறை சார்ந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்த சமூக சமூக கொள்கை திட்டத்தின் மூன்று தூண்களும், 5 முக்கிய அம்சங்களில் கவனம் செலுத்துவதாக உள்ளன:
சமூக பாதுகாப்பு அமைப்புகளை வலுப்படுத்துவதற்கான ஒருங்கிணைந்த அணுகுமுறை மேற்கொள்ளப்படுகிறது. அதிகம் பாதிக்கப்படக்கூடிய, குழந்தைகளுக்கான நலவாழ்வில், அதிக தாக்கம் ஏற்படுத்தக்கூடிய விஷயங்களில், கவனம் செலுத்தி நிலைமையை மேம்படச் செய்யும் வகையிலும், அவசர காலங்கள் மற்றும் பாதிப்புகளை குறைப்பது உட்பட முக்கிய அம்சங்களில் சிறப்பான, சமமான நிதி பங்களிப்பு செய்தல் ஆகியவற்றில் இந்த அணுகுமுறை மேற்கொள்ளப்படுகிறது.
குழந்தைகளின் வாழ்க்கை மற்றும் குழந்தைப்பருவ கல்வி போன்ற விஷயங்களையும் தாண்டி, துவக்ககால குழந்தைப் பருவ வளர்ச்சி மற்றும் திட்டங்களுக்கான விரிவான கொள்கையை உருவாக்குதல், கருத்தரிப்பதில் தொடங்கி பள்ளியில் சேர்ப்பது வரையிலான திட்டங்கள் மற்றும் நிதி, அவர்களின் மேம்பாட்டுக்கான சூழல், திட்டம் மற்றும் கொள்கைகள், மனிதாபிமான நடவடிக்கைகள் ஆகியவை மேற்கொள்ளப்படுகின்றன. மேலும், பள்ளிச்சேர்க்கைக்கான வயதை எட்டும் வரை, குழந்தைகளின் மேம்பாட்டுக்கு தேவையான சிறந்த குழந்தைகள் பாதுகாப்பு, ஊட்டச்சத்து, ஆரம்ப நிலை கல்வி போன்ற சேவைகள் வழங்கப்படுகின்றன.
வளர் இளம் பருவத்தினர் மற்றும் இளைஞர்கள், அவர்கள் சமூகத்தில் சிறந்த அங்கத்தினராக திகழும் வரை, அவர்களுக்கான விரிவான ஒருங்கிணைந்த கொள்கைகள் மற்றும் திட்டங்கள் மூலம் உதவிக்கரம் நீட்டப்படுகிறது. மேலும், தீர்வுகளை அடையாளம் காண்பது, அரசு மற்றும் தனியார்பங்களிப்பில் இளைஞர்களையும் ஒன்றிணைப்பது ஆகியவற்றில் கவனம் செலுத்தப்படுகிறது. கற்றல், வேலை வாய்ப்பு மற்றும் பொதுநலனில் பங்களிப்பு செய்தல் ஆகியவற்றுக்காக, வளர் இளம் பருவத்தினர் மற்றும் இளைஞர்கள் தங்கள் திறனை மேம்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்புகள் மற்றும் திட்ட ஒருங்கிணைப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன.
8ம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான இடைநிலைக் கல்விக்கு அவர்கள் செல்லும் போது அதிக கவனம் செலுத்தப்படுகிறது, அதோடு 12 ஆண்டுகால தடையற்ற, தரமான கல்விக்காக அரசு திட்டங்கள் மேம்படுத்தப்படுகிறது.
குழந்தைத் தொழிலாளர்கள் (15 வயது முதல் -18 வயது வரை), குழந்தை திருமணம் மற்றும் அடுத்த தலைமுறை பிரச்சினைகள் ஆகியவற்றை தீர்க்க வலுவான கண்காணிப்பு மற்றும் நிர்வாக அமைப்புகளை ஏற்படுத்த வேண்டும். குழந்தை பாதுகாப்பு அமைப்புகளுக்கு வலு சேர்ப்பதற்கான நிதி மற்றும் திறன் மேம்பாட்டு உத்திகள் உருவாக்கவும், சமூக நல செயல்பாடுகள் மற்றும் மாவட்டங்களுக்கு உட்பட்டு இயங்கும் சமூக பணியாளர்களுக்கான செயல்பாடுகளை மேம்படுத்துவது குறித்தும் ஆராயப்படும்.
குழந்தைகள் எதிர்கொள்ளக்கூடிய ஏற்றத்தாழ்வுகள், பாகுபாடு மற்றும் சுரண்டல் ஆகியவற்றுக்கு தீர்வு காண்பதற்கு, அவர்கள் சார்பாக வாதிடுவது, ஒரு செயல்முறையாக கருதப்படுகிறது. இது, வளர் இளம் பருவத்தினர் மற்றும் இளைஞர்களுக்கு ஏற்படும் பாதிப்பை சரி செய்து, அவர்களை முடிவுகளை எடுக்கும் திறன் பெற்றவர்களாக ஆக்க உதவுகிறது. இதை நிறைவேற்ற சமூகக் கொள்கை அணுகுமுறை மூலமாக, குழந்தைகள், இளம் பருவத்தினர் மற்றும் இளைஞர்கள் சார்பாக வாதிடுவதற்காக வலுவான நிலைப்பாடு அவசியம். அவர்களை பாதிக்கும் பிரச்னைகள் குறித்து பேச இது உதவுகிறது. எனவே, கல்வியாளர்கள், ஊடகங்கள், சமூக அமைப்புகள், வளர் இளம் பருவத்தினர் மற்றும் இளைஞர்களை வழிநடத்தும் அமைப்புகள், பிரபலங்கள் மற்றும் நடிகர்களுடன் வலுவான கூட்டாண்மை ஏற்படுத்தப்பட்டுள்ளது.