இடர் ஆபத்துக் குறைப்பு மற்றும் காலநிலை மாற்றத்துக்கு இசைவாக்கமடைதல் தொடர்பாக இலங்கை சிறுவர்களின் பிர
சிறுவர்களாலே சிறுவர்களுக்கான பிரகடனம்

Highlights
இலங்கையின் அமைவிடம், அதன் தரைத்தோற்ற அமைப்புக்கள், மலைகள், ஆறுகள் மற்றும் அயனமண்டல காலநிலை நிகழ்வுகள் போன்ற காரணங்களால் நாம் கடுமையான மழைவீழ்ச்சி, வெள்ளங்கள், நிலச்சரிவுகள் போன்ற சீரற்ற காலநிலை நிகழ்வுகள் மற்றும் இயற்கை அழிவுகளுக்கு முகங்கொடுக்கிறோம். தீவிர காலநிலை நிகழ்வுகள் மற்றும் இயற்கை அனர்த்தங்கள் அதிகரிக்கும் போது அவற்றுக்கு ஈடுகொடுக்கும் விதத்தில் நாம் எம்மை தயார்படுத்திக் கொள்ளாதிருந்தால் அதிகமான குடும்பங்களும் சிறுவர்களும் பாதிக்கப்படுவதை காண்கிறோம். இது எமது நலன்களை பாதிக்கும். ஏனெனில், நாம் எமது நலன்களுக்காக எமது பெற்றோர், பாதுகாவலர்கள் மற்றும் மூத்தோரிலேயே தங்கி வாழ்கிறோம். இத்தகைய இயற்கை அழிவுகளின் போது எமது சில முக்கிய தேவைகள் நிறைவேறுவதில்லை என்பதை நாம் அறிந்து வைத்துள்ளோம்.
மாற்றத்தின் முகவர்கள் என்ற வகையில் எமது முக்கிய வகிபாகத்தை நிறைவேற்றியதோடு இயற்கை அனர்த்தங்கள் எமது வாழ்வில் ஏற்படுத்தும் தாக்கத்தை குறைக்கவும் இடர் நிலைமையில் சிறுவர் பாதுகாப்பு மற்றும் கல்வியில் இடைவெளிகள் இருக்கக்கூடாது என்பதை உறுதிப்படுத்தவும் ஆறு தீர்மானங்களுடன் ஒரு சமவாயத்தை விருத்தி செய்துகொள்வதற்கான வாய்ப்பினை பெற்றுக்கொண்டோம்.
செயலார்வத்துடன் பங்கேற்கும் போது இடர் ஆபத்தினை எவ்வாறு குறைத்துக்கொள்ளலாம் என்றும் இடர் நிலைமையின் போது அதனை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்றும் எமது சமூகங்களில் எவ்வாறான காலநிலை மாற்ற நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன என்றும் சிறந்ததொரு விளக்கம் கிடைப்பதுடன், எல்லாவற்றுக்கும் மேலாக எமது எதிர்காலத்தில் செல்வாக்கு செலுத்த எமக்கு சந்தர்ப்பம் கிட்டியுள்ளது என உணர்கிறோம்.